ஈரோடு, பெருந்துறை பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.4¾லட்சம் சிக்கியது


ஈரோடு, பெருந்துறை பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.4¾லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 26 March 2019 4:15 AM IST (Updated: 26 March 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு, பெருந்துறை பகுதியில் நடந்த பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.4¾ லட்சம் சிக்கியது.

ஈரோடு,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18–ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு வெண்டிபாளையம் கட்டளை கதவணை பகுதியில் பறக்கும் படை அதிகாரி குருசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.2 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் வேன் டிரைவர் பாபுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பணம் ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த முட்டை வியாபாரி சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து, ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, காரை ஓட்டிவந்தது ஈரோட்டை சேர்ந்த பனியன் வியாபாரி திருநாவுக்கரசர் என்பதும், அவர் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.

பெருந்துறை துடுப்பதி அருகே உள்ள சிலேட்டர்நகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகன்ராஜ், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் ராஜீவ்நகரை சேர்ந்த செந்தில் (35) என்பவர் காரில் பெருந்துறை சென்று கொண்டிருந்தார். அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.82 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அம்மாபேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை நிலைக்குழு சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் அந்தியூர் பிரிவு, மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் சோதனைசாவடி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story