மூடப்பட்ட ரெயில்வே கேட் திறப்பது குறித்த பிரச்சினை: அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தள்ளிவைப்பு
குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லியாகத் தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
குளித்தலை,
கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி ஏப்ரல் 4-ந்தேதி அப்பகுதியில் கடையடைப்பு மற்றும் ரெயில் மறியல் நடத்தப்படும் எனவும், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இதுதொடர்பாக குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லியாகத் தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் ரெயில்வே உதவி கோட்ட மேலாளர், பிரச்சினை குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று ஏப்ரல் 3-ந்தேதிக்குள் முடிவு சொல்வதாக தெரிவித்தார். அதன்பேரில் இதுதொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை ஏப்ரல் 3-ந்தேதிக்கு தள்ளிவைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதில் ரெயில்வேதுறை அதிகாரிகள், லாலாபேட்டை பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story