மாவட்ட செய்திகள்

நெய்வேலியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல், ஆசிரியர் சாவு + "||" + Neyveli In electrical pole Motorcycle clash, teacher death

நெய்வேலியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல், ஆசிரியர் சாவு

நெய்வேலியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல், ஆசிரியர் சாவு
நெய்வேலியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி,

பண்ருட்டி தாலுகா மானாடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செந்தமிழ்செல்வன்(வயது 32). இவர் 10-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் 27-வது வட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது மோதாமல் இருக்க செந்தமிழ்செல்வன் பிரேக் பிடித்தார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தமிழ்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கஜகஸ்தானில் பேருந்து விபத்து; 11 பேர் பலி
கஜகஸ்தானில் பேருந்து விபத்தில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
2. தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து: இலங்கையில் 30 பேர் சாவு
இலங்கையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
3. தளவாய்பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்-கிளனர் உயிர்தப்பினர்
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் அந்த லாரி சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
4. தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டினால் உரிமம் ரத்து - போலீசார் எச்சரிக்கை
தேனி, அம்மையநாயக்கனூர் அருகே தனியார் பஸ்களால் விபத்து ஏற்பட்டதையடுத்து அதிவேகமாக பஸ்களை ஓட்டினால் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5. கும்பகோணத்தில் குடோனில் தீ விபத்து; ரூ.4 லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்து நாசம்
கும்பகோணத்தில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.