தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக உள்ளது முத்தரசன் குற்றச்சாட்டு


தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக உள்ளது முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 March 2019 4:45 AM IST (Updated: 26 March 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக உள்ளது என்று, கீழ்வேளூரில் முத்தரசன் கூறினார்.

கீழ்வேளூர்,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு மாபெரும் வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளார். இந்த கூட்டணி நாகை உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறது.

எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து மக்கள் கூடுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினரால் பதில் கூற முடியவில்லை.

தேர்தல் ஆணையம் தினமும் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்தால் அது மோடி அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி சுதந்திரமாக நடுநிலையோடு செயல்பட வேண்டும். கோர்ட்டு உத்தரவு என்று காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை மின்னல் வேகத்தில் அகற்றும் அதிகாரிகளும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story