தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் திருவாரூரில், கி. வீரமணி பேட்டி


தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் திருவாரூரில், கி. வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 7:04 PM GMT)

தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று, திருவாரூரில் கி.வீரமணி கூறினார்.

திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற தொகுதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் திருவாரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. வட மாநிலங்களில் கூட மோடி தோற்பார் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

பிரியாணி பொட்டலங்களுக்கு கணக்கு பார்க்கும் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களில் ஜோசிய கணிப்பிற்கு கணக்கு கேட்காதது ஏன் என்பது தெரியவில்லை. அ.தி.மு.க.வுக்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை. இது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story