தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 27 பேர் வேட்புமனு தாக்கல்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. வேட்புமனுதாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பி.பழனியப்பன் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான மலர்விழியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பூக்கடை முனுசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் ஆர்.பாலு, உமேஸ்வரன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.
அ.ம.மு.க. மாற்று வேட்பாளராக பி. எழில்மறவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுதாக்கல் செய்த பிறகு அ.ம.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் நிருபர்களிடம் கூறுகையில், அ.ம.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்தே ஆளும் கட்சி எங்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கிய பின்னரும் எங்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக மக்கள் நடக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் அதில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவிற்கு பின்னர் ஆளுமை மிக்க தலைவராக டி.டி.வி.தினகரன் உருவெடுத்து உள்ளார் என்று தெரிவித்தார்.
இதேபோன்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளர் வக்கீல் டி.ராஜசேகர் கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மலர்விழியிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் எல்.பிரதீப்குமார், கே.பி.எஸ்.சரவணன், வெங்கடேஷ், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.-அ.தி.மு.க.கூட்டணி)
டாக்டர் எஸ்.செந்தில்குமார் (தி.மு.க)
பி.பழனியப்பன் (அ.ம.மு.க.)
டி.ராஜசேகர் (மக்கள் நீதி மய்யம்)
சி.சிவானந்தம் (பகுஜன் சமாஜ் கட்சி)
ருக்மணிதேவி (நாம் தமிழர் கட்சி)
டாக்டர் ஆர்.செந்தில் (பா.ம.க. மாற்று)
டி.என்.வி.செல்வராஜ் (தி.மு.க. மாற்று)
பி.எழில்மறவன் (அ.ம.மு.க. மாற்று)
ஜி.ராதா (நாம்தமிழர் கட்சி மாற்று) உள்பட 27 பேர்.
Related Tags :
Next Story