புலியூர் வெள்ளாளப்பட்டியில் தேர்தலை புறக்கணிப்பதாக பதாகைகள் வைத்த பொதுமக்கள்
புலியூர் வெள்ளாளப்பட்டியில் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் பதாகைகள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
தமிழக அரசு வீடற்ற ஏழைகளுக்காக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடத்தை தேர்வு செய்து பணிகளை குடிசை மாற்று வாரியம் தொடங்கியது.
ஆனால் அரசால் தேர்வு செய்யப்பட்ட இடம், மழைக்காலங்களில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கும் பகுதி என்றும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பயனுள்ளதாக இருந்து வருகிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். எனவே இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டாம் என்றும், வேறு இடத்திற்கு இத்திட்டத்தை மாற்ற வேண்டியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்- அமைச்சரின் தனிப்பிரிவு, எம்.பி., மாவட்ட கலெக்டர், போக்குவரத்து துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என பலருக்கும் கோரிக்கை மனு அனுப்பினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட பணிகளை தொடங்க பூமிபூஜை செய்யப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஊர் கூட்டத்தை கூட்டி பேசினர். கூட்டத்தில், அரசு தங்களின் கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, வருகிற நாடாளுமன்ற தேர்தலை இப்பகுதி மக்கள் அனைவரும் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு குறித்த அறிவிப்பு பதாகைகள் சம்பந்தப்பட்ட இடம், அந்த இடத்திற்கு அருகில் உள்ள திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, புலியூர் கடைவீதியில் நான்கு ரோடு சந்திப்பு பகுதி, கவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் என நான்கு இடங்களில் நேற்று காலை பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டது.
இதையடுத்து பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார், புலியூர் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் ஆகியோர் வெள்ளாளபட்டிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அனுமதி இன்றி இவ்வாறு பதாகைகளை வைக்கக்கூடாது என்றும், அவற்றை அகற்ற வேண்டும், என்றும் அதிகாரிகள் கூறினர். அதற்கு பொதுமக்கள் இப்பிரச்சினை குறித்து உரிய அதிகாரிகள் தங்களை அழைத்து பேச வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும், கிராம நிர்வாக அலுவலரும் தெரிவித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் அந்த பதாகைகளை அகற்றினர். இந்த தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளால் நேற்று காலை புலியூர் வெள்ளாளபட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story