வானவில் : எடிட்டிங் செய்ய உதவும் ‘மெவோ’ கேமரா


வானவில் : எடிட்டிங் செய்ய உதவும் ‘மெவோ’ கேமரா
x
தினத்தந்தி 27 March 2019 11:26 AM GMT (Updated: 27 March 2019 12:17 PM GMT)

வாழ்வின் சிறப்பான தருணங்களை வீடியோ எடுத்து மகிழ்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.

இன்றைக்கு நமது ஸ்மார்ட் போனிலேயே வீடியோ எடுக்கும் வசதி வந்துவிட்டாலும் எடிட்டிங் செய்து தரமான வீடியோவாக மாற்றுவது பெரிய வேலை. குறிப்பாக யு-டியூப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டிய வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு சில மணி நேரங்கள் ஆகும். மெவோ என்னும் பாக்கெட் சைஸ் கேமரா இந்த சிரமத்தை குறைக்கிறது. வீடியோக்களை எடுக்கும் போதே செயலியின் துணையுடன் எடிட் செய்துக் கொள்ளலாம்.

இதனால் எடுத்த உடனேயே நேரலையாக ஒளிபரப்பவும் முடியும். மெவோவில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நமது ஸ்மார்ட் போனுக்கு அனுப்பி போனிலேயே நமக்கு தேவையான வகையில் உடனுக்குடன் எடிட்டிங் செய்து கொள்ளலாம் .

வீட்டில் நடக்கும் சிறிய விசேஷங்களுக்குக் கூட நாமே இது போன்ற வீடியோக்களை எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். 1080 பிக்சல்கள் துல்லியத்தில், ஸ்டூடியோ தரத்தில் 4 k வீடியோக்கள் எடுக்கலாம். 150 டிகிரி கோணத்தில் திரும்பக் கூடிய லென்ஸ், சோனி சென்சார், அருமையான மைக்ரோ போன்கள் என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் அம்சங்களை கொண்டிருக்கிறது மெவோ. இந்த கேமரா ஆப்பிள் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும்.

Next Story