நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர மாநில போலீசார் ஆலோசனை கூட்டம் பர்கூரில் நடந்தது


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர மாநில போலீசார் ஆலோசனை கூட்டம் பர்கூரில் நடந்தது
x
தினத்தந்தி 28 March 2019 4:00 AM IST (Updated: 28 March 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர மாநில போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பர்கூரில் நடந்தது.

பர்கூர்,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் அதே தேதியில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லைப்பகுதி அமைந்துள்ளது.

இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து பர்கூர் மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து, குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.கே.நாயுடு, சப்-இன்ஸ்பெக்டர் அனுமந்தப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக-ஆந்திர மாநில எல்லையில் பாதுகாப்புகளை பலப்படுத்துவது, குறிப்பாக வரமலைகுண்டா, குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசாரை கொண்டு கண்காணிப்பது, வனப்பகுதியையொட்டி தீவிரமாக கண்காணிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Next Story