மாவட்ட செய்திகள்

துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public road traffic to drinking water in Duraiyur

துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்,

துறையூர் நகராட்சி 16-வது வார்டு சிக்கன்பிள்ளையார் கோவில் தெருவில் குட்டக்கரையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை தான் காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.


தற்போது உப்பு தண்ணீர் மோட்டார் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வருவதில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் குழாயிலும் நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காததால், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் துறையூர்- பெரம்பலூர் சாலையில் பெரிய கடைவீதியில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூர்- பெரம்பலூர் சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு
மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஆலங்குடியில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல்
அனைவருக்கும் வேலையை பகிர்ந்து வழங்கவேண்டும் என்று கூறி பள்ளத்திவிடுதி கிராமத்தில் ஆலங்குடி-கொத்தமங்கலம் சாலையில் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. பெரம்பலூர்- விளாமுத்தூர் இடையே ரூ.3 கோடியில் சாலை விரிவாக்கம்
பெரம்பலூர்- விளாமுத்தூர் இடையே ரூ.3 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
4. இளம்பிள்ளை அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்
இளம்பிள்ளை அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்.
5. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுரை
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.