தண்டவாள பராமரிப்பு பணி: நாளை முதல் 30–ந் தேதி வரை ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை கோட்ட ரெயில்வேயில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30–ந்தேதி வரை ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை–மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56821/56822) நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30–ந் தேதி வரை திண்டுக்கல்–திருச்சி இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்–மும்பை எக்ஸபிரஸ ரெயில்(வ.எண்.16352) வருகிற 7–ந் தேதி, 14–ந் தேதி, 21–ந் தேதி மற்றும் 28–ந் தேதிகளில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றடையும்.
குருவாயூர், தூத்துக்குடி–சென்னை இணைப்பு ரெயில்(வ.எண்.16128) நாளை முதல் வருகிற 30–ந் தேதி வரை திருச்சி ரெயில்நிலையத்துக்கு சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்றடையும்.
மதுரை–கச்சிக்குடா ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.17616) வருகிற 14–ந் தேதி, 21–ந் தேதி மற்றும் 28–ந் தேதிகளில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்றடையும்.
நாகர்கோவில்–கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16354) வருகிற 16–ந் தேதி, 23–ந் தேதி மற்றும் 30–ந் தேதிகளில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்றடையும்.
கன்னியாகுமரி–ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) வருகிற 14–ந் தேதி, 21–ந் தேதி மற்றும் 28–ந் தேதிகளில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்றடையும்.
அதேபோல, கீழ்க்கண்ட ரெயில்கள் நாளை முதல் வருகிற 30–ந் தேதி வரை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை–பழனி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56710) மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கு புறப்படும்.
நெல்லை–ஈரோடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56826) சேலம் ரெயில் நிலையத்துக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றடையும்.
நாகர்கோவில்–மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16340) திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் சேலம் ரெயில்நிலையத்துக்கு சுமார் ½ மணி நேரம் தாமதமாக புறப்படும்.
மதுரை–பிகானீர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22631) நாளை முதல் வருகிற 30–ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்றடையும்.
பாலக்காடு–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56769) நாளை முதல் வருகிற 17–ந் தேதி வரையும், 21–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகள் தவிர பிற நாட்களில் விருதுநகர்–நெல்லை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லை ரெயில்நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு திருச்செந்தூர் ரெயில் புறப்பட்டு செல்லும்.
மறுமார்க்கத்தில், திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) நாளை முதல் வருகிற 17–ந் தேதி வரையும், வருகிற 21–ந் தேதி முதல் வருகிற 30–ந் தேதி வரையும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தவிர பிற நாட்களில் நெல்லை–விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விருதுநகர் ரெயில்நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு பாலக்காடு புறப்பட்டு செல்லும்.