மலையரசி அம்மன் கோவில் திருவிழா: மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 10 பேர் காயம்


மலையரசி அம்மன் கோவில் திருவிழா: மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 10 பேர் காயம்
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரத்தில் மஞ்சுவிரட்டு நடந்தது. அதில் காளைகள் முட்டி 10 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ளது நெடுமரம் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்கத்து கிராமங்களான புதூர், சில்லாம்பட்டி, ஊர்குளத்தன்பட்டி, உடையநாதபுரம், உள்ளிட்ட 5 கிராமத்தினரால் வருடந்தோறும் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தநிலையில் கோவில் திருவிழாவையொட்டி 2 முறை மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா நடைபெற்று, கடந்த 24–ந்தேதி ஒரு மஞ்சுவிரட்டு நடந்து முடிந்த நிலையில், நேற்று 2–வது கட்டமாக மஞ்சுவிரட்டு நடந்தது.

இந்த 2 மஞ்சுவிரட்டுகளிலும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த சுமார் 300–க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அதைத்தொடர்ந்து கிராம மக்கள் மந்தையில் இருந்து மேள தாளத்துடன் கோவில் மாடுகளை ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக தொழுவிற்கு கொண்டு வந்தனர். பெண்கள் வீதிதோறும் காளைகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் தொழுவிற்குள் கொண்டுவரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

அதேபோல் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு களம் இறக்கப்பட்டனர். பகல் 12 மணிக்கு வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடைத்துறையினர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதைதொடர்ந்து தொழுவில் இருந்து 80–க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.

அதில் 50–க்கும் மேற்பட்ட வீரர்கள் மாடுபிடிப்பதில் ஈடுபட்டனர். முன்னதாக வயல் பகுதிகளிலும் மற்றும் கண்மாய்களிலும் 200–க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. சுற்றுப்புற பகுதிகளான சிங்கம்புணரி, மாங்குடி, மணக்குடி, திருப்பத்தூர், கொளுஞ்சிப்பட்டி, வைரம்பட்டி, திருக்கோஷ்டியூர், காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான அளவில் காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.


Next Story