காஞ்சீபுரத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
காஞ்சீபுரத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி யோகேஷ் பி.மகசி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி டெபசிஸ்தாஸ், காவல் பார்வையாளர் சிவகுமார் வர்மா ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்களுடன் தேர்தல் விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் விதிகளை, வேட்பாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வேட்பாளர்களுடைய செலவு கணக்குகளையும் அவர்களுடைய தேர்தல் விதிமுறைகளையும் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது.
எனவே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, தேர்தல் நடைபெற வேண்டுமென வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, சென்னை தென்மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், ரஜினிகாந்த், சுரேஷ்சண்முகம், வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story