தென்காசியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

தென்காசியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்காசி,
தென்காசியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிக்கு செல்லும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு குற்றாலம் பராசக்தி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தென்காசி நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சவுந்தர்ராஜ், தென்காசி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹென்றி பீட்டர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் 1,700-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடியில் அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். படிவங்களை எவ்வாறு நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
ஆலங்குளம்
இதேபோல் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சிக்கு ஆலங்குளம் தாசில்தார் கந்தப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக தாசில்தார் பத்மநாபன், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ், மண்டல துணை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சேரன்மாதேவியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் தேர்தல் மேற்பார்வையாளர் பகத்சிங்குபேலா, தேர்தல் செலவின மேற்பார்வையாளர் மணி, கலெக்டர் ஷில்பா, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், சேரன்மாதேவி கல்வி மாவட்ட அலுவலர் சுடலை, தாசில்தார்கள் சேரன்மாதேவி சந்திரன், அம்பை வெங்கடேசன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் நல்லையா, துணை தாசில்தார்கள் மாணிக்கவாசகம், ராமசந்திரன், சுப்பிரமணியன், செல்லத்துரை, அரசு அலுவர்கள் உள்பட 1500 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story