பறக்கும் படையினர் வாகன சோதனை


பறக்கும் படையினர் வாகன சோதனை
x
தினத்தந்தி 1 April 2019 4:15 AM IST (Updated: 1 April 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

திருவரங்குளம்,

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 18-ந்தேதி நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதையடுத்து திருவரங்குளம் வேளாண்மை உதவி விதை அலுவலர் தங்கராஜன் தலைமையில், பறக்கும் படையினர் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அந்த வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

இதேபோல் அறந்தாங்கி, கறம்பக்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
1 More update

Next Story