லால்குடி அருகே வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்


லால்குடி அருகே வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 April 2019 4:15 AM IST (Updated: 1 April 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பறக்கும்படை அதிகாரி டாக்டர் சித்ரா தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பை-பாஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும்படை அதிகாரி டாக்டர் சித்ரா தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திருச்சி நோக்கி சென்ற காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.

காரில், சமயபுரம் டோல்கேட் அருகே நொச்சியம் பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 780 கொண்டு செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பணம் லால்குடி ஆர்.டி.ஓ. பாலாஜி அறிவுரையின் படி லால்குடி தாசில்தார் சத்திய பாலகங்காதரன் மூலம் லால்குடி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story