விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேர்தல் பொதுபார்வையாளர் எச்சரிக்கை


விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேர்தல் பொதுபார்வையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 April 2019 4:15 AM IST (Updated: 1 April 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பொதுபார்வையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கும் ஆலோசனை கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர் விஜயகுமார், தேர்தல் செலவின பார்வையாளர் சஞ்சய்முகர்ஜி, மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது பொது பார்வையாளர் விஜயகுமார் பேசும்போது கூறியதாவது:-

வேட்பாளர் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் தொடர்பாக புகார்களை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம். தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற பொதுமக்களும், வேட்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் செலவின பார்வையாளர் சஞ்சய்முகர்ஜி பேசுகையில், ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம் வரை செலவழித்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர் செலவழிக்கும் செலவுகளை உரிய பதிவேடுகளில் பராமரித்து செலவின பார்வையாளரிடம் காண்பிக்கவேண்டும். வருகிற 7, 11, 15 ஆகிய தேதிகளில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும். அன்றைய தேதிகளில் வேட்பாளர்கள் தாங்கள் செய்துள்ள செலவுகளுக்கான கணக்கினை சமர்ப்பிக்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், கண்காணிப்புக்குழு அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள் மற்றும் அனைத்து வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story