மாவட்ட செய்திகள்

சோழவந்தான் அருகே எம்.ஜி.ஆர். உருவச்சிலை உடைப்பு போலீசார் விசாரணை + "||" + MGR idol busting near solavanthan Police investigation

சோழவந்தான் அருகே எம்.ஜி.ஆர். உருவச்சிலை உடைப்பு போலீசார் விசாரணை

சோழவந்தான் அருகே எம்.ஜி.ஆர். உருவச்சிலை உடைப்பு போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் முன்னாள் முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆர். திருஉருவச்சிலை உள்ளது. நேற்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.

இதில் எம்.ஜி.ஆர். சிலையில் வலது கை மணிக்கட்டு பகுதி உடைக்கப்பட்டு சேதமடைந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பல்லடத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற ரூ.7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர்; லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற ரூ. 7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் பல்லடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2. பேரணாம்பட்டு அருகே ஆசிரியைகள் மோதல்; பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் கல்வி அலுவலர் விசாரணை
பேரணாம்பட்டு அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை – ஆசிரியை இருவரும் சண்டை போட்டு கொண்டதால் பொதுமக்கள் பள்ளியை மூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
3. எண்ணூரில் அனல்மின் நிலைய பணிக்கு வைத்து இருந்த 100 ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசம்; போலீஸ் விசாரணை
எண்ணூரில் அனல்மின் நிலைய பணிக்காக வைத்து இருந்த 100 ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமானது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நாசவேலை காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4. ஈரோடு பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது புகை வந்த நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் மாயம் போலீஸ் விசாரணை
ஈரோடு பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தபோது, புகை வந்த நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் சாவு
காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-