கொடைரோடு அருகே, பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


கொடைரோடு அருகே, பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 31 March 2019 10:30 PM GMT (Updated: 2019-04-01T05:05:03+05:30)

கொடைரோடு அருகே, பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொடைரோடு,

கொடைரோடு அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த நடராஜன் மனைவி மாரியம்மாள் (வயது 57). இவர் நேற்று மாலை கொழிஞ்சிப்பட்டி ரெயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் அங்கு வந்த 2 பேர் மாரியம்மாளிடம் ஒரு முகவரியை காண்பித்து விவரம் கேட்டனர். இந்தநிலையில் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மாரியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை திடீரென பறித்து விட்டு அங்கிருந்து மின்னல்வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story