பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா குற்றச்சாட்டு


பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 April 2019 11:25 PM GMT (Updated: 2 April 2019 11:25 PM GMT)

பாரதீய ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா கூறினார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் –தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கமும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக தொழிலதிபர் வெங்கடேசனும் போட்டியிடுகிறார்கள்.

அவர்களை ஆதரித்து தட்டாஞ்சாவடி, கதிர்காமம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் மகளிர் காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளர் அப்சரா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–

திருநங்கையான எனக்கு ராகுல்காந்தி ஒரு முகவரியை கொடுத்துள்ளார். டாஸ்மாக்கை எதிர்த்த பா.ம.க. தற்போது ஊறுகாய்போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில் இந்தியாவில் 8 லட்சம் பெண்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது முழுக்க முழுக்க அரசியல் சாயம் பூசப்பட்டது. அவரது மகனை தேர்தலில் தோல்வியுற செய்யவேண்டும் என்பதே இதன் உள்நோக்கம். மதம், கலவரம் என்ற நோக்கத்தில் உள்ள பிரதமருக்கு நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பினை பற்றிய கவலையில்லை. பாரதீய ஜனதாவின் கைக்கூலியாக அ.தி.மு.க. உள்ளது.

இவ்வாறு அப்சரா கூறினார்.


Next Story