மருத்துவமனைகளில் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு
அரசு மருத்துவ மனையில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் மருத்துவமனையை தூய்மையாக வைத்து கொள்ள உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொன்னமராவதி,
பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவ மனையில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் மருத்துவமனையை தூய்மையாக வைத்து கொள்ள உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள் சரவணன், மார்சல், ஜனனிப்பிரியா, மேனகா, அஸ்வினி ரஞ்சிகா, சித்தமருத்துவர் தாமரைச்செல்வன், செவிலியர்கள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
திருமயம் அரசு அண்ணா மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மருத்துவமனையை தூய்மையாக வைத்து கொள்ள உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்பட அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். டாக்டர்கள் கூறுகையில், பாலீத்தின் பைகளை எவ்வாறு ஒழிக்க வேண்டும். தினந்தோறும் மருத்துவமனையை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு வரும் உள் நோயாளிகள், புறநோயாளிகள் அனைவரும் பயன்படுத்தும் குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பையை சேர்த்து வைத்து அப்புறப்படுத்த வேண்டும். உயிர்காக்கும் உன்னத பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நோயாளிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டு கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story