மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு படுகாயம்
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 4 April 2019 8:28 PM GMT)

கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு படுகாயம் அடைந்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சசிகுமார்(வயது 33). தலைமை காவலராக(ஏட்டு) பணியாற்றுபவர் குணசேகரன்(55). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் 1 மணியளவில் கோத்தகிரியில் இருந்து கட்டபெட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சசிகுமார் ஓட்டினார். வெஸ்ட்புரூக் அருகே எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சசிகுமார் மற்றும் குணசேகரன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சசிகுமார் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கீழ்கோத்தகிரி பகுதியை சேர்ந்த முருகன்(48) என்பது தெரியவந்தது.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story