மதுரை, உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான மூக்கையாத்தேவர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
உசிலம்பட்டி,
மதுரை அரசரடியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., வேட்பாளர் ராஜ்சத்யன், பொருளாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் அ.ம.மு.க. சார்பில் மாநகர செயலாளர் ஜெயபால், பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், பார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சி சார்பில் நவமணி, மகேஸ்வரன், பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த முருகன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் திருமாறன், வல்லரசு பார்வர்டு பிளாக் அம்மாசி ஆகியோர் மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி தேவர் கல்லூரி சார்பில் தாளாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமையில் முதல்வர் ஜோதிராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவசி, முத்துராமலிங்கம், பாண்டியம்மாள், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா, முன்னாள் நகர்மன்ற தலைவர் பஞ்சம்மாள், முன்னாள் ஒன்றிய தலைவர் பால்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். இதேபோன்று அ.ம.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Tags :
Next Story