மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் 3 நாட்கள் ஆய்வு


மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் 3 நாட்கள் ஆய்வு
x
தினத்தந்தி 7 April 2019 4:15 AM IST (Updated: 7 April 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் 3 நாட்கள் ஆய்வு செய்யப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட கலெக்டருமான சுரேஷ்குமார் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையத்தால் சஞ்சய்முகர்ஜி, சதீஸ் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் களின் தேர்தல் செலவின கணக்குகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை), 11-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்கினை, சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை, தேர்தல் செலவின பார்வையாளர் சஞ்சய்முகர்ஜியிடமும், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வேட்பாளர்கள் செலவு கணக்குகளை, தேர்தல் செலவின பார்வையாளர் சதீசிடமும் அளிக்க வேண்டும். இந்த ஆய்வு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story