மாவட்ட செய்திகள்

தேர்தல் பணி குறித்து போலீசார் ஆலோசனை: அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை + "||" + The police advise the election work If you act in favor of political parties Heavy action

தேர்தல் பணி குறித்து போலீசார் ஆலோசனை: அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை

தேர்தல் பணி குறித்து போலீசார் ஆலோசனை: அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி.சுரேந்தர் சிங் யாதவ் எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18–ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினரும் புதுவை வந்துள்ளனர். தேர்தல் காலகட்டத்தில் போலீசார் ஆற்றவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ் கலந்துகொண்டு போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். குறித்த நேரத்தில் பணிக்கு வந்துவிட வேண்டும். பாகுபாடுகள் பார்க்காமல் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யவேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது.

அவ்வாறு செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு தினத்தன்று யாராவது பிரச்சினை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. வாக்காளர்களுக்கு கொடுக்க மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்யவேண்டும்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவப்படையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் யாருக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது.

இவ்வாறு ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ் பேசினார்.

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் பேசும்போது, இந்த தேர்தலில் சுமார் 2 லட்சம் இளம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெற போலீசார் தேர்தல் துறையுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா பேசும்போது, தேர்தல் பணியின்போது குறைபாடுகள் இருந்தால் தேவைகள் குறித்து தேர்தல் துறையிடம் தெரிவிக்கவேண்டும். மெயின்ரோட்டில் வாக்குச்சாவடிகள் இருக்கும்போது அங்கு போக்குவரத்தை மாற்றியமைக்கும் ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் செய்யவேண்டும்.

வாகன சோதனையின்போது பணமோ, பரிசுப்பொருட்களோ சிக்கினால் நீங்களாகவே விடுவிக்கக்கூடாது. அதை தேர்தல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. மணவாளக்குறிச்சி அருகே ஜெபக்கூட கட்டிடப்பணிக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
மணவாளக்குறிச்சி அருகே ஜெபக்கூட கட்டிடப்பணிக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி போலீஸ் குவிப்பு.
2. நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.
4. வடகாடு அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வடகாடு அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. போலீஸ், டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னையில் போலீஸ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் என 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை