பிரேத பரிசோதனை குளறுபடி குறித்து தகவல் அளித்தவர்: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதிகளிடம் அதிகாரி முறையிட்டதால் பரபரப்பு
பிரேத பரிசோதனை செய்வதில் உள்ள குளறுபடிகள் குறித்து தகவல் அளித்த சென்னை அரசு ஆஸ்பத்திரி அதிகாரி, மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதிகளிடம் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வக்கீல் அருண்சுவாமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “பல்வேறு முறைகேடுகளை தடுக்க அரசு ஆஸ்பத்திரிகளில் நடக்கும் பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண்டுக்கு, சுமார் 65 ஆயிரம் பிரேத பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கோர்ட்டு உத்தரவிட்டபடி அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமற்றது. சந்தேகத்திற்கு உள்ளாகும் மரணங்களுக்கு மட்டுமே பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படும். பெண்களின் உடலை பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்வதை அவர்களின் உறவினர்கள் பெரும்பாலும் விரும்புவது இல்லை“ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், “கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவதற்கு முக்கிய காரணம், முறையாக பிரேத பரிசோதனை செய்யாததும், அதன் அறிக்கையை தாக்கல் செய்யாததும் தான்“ என்றனர்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, சென்னை அரசு ஆஸ்பத்திரியின் விஞ்ஞான அலுவலர் லோகநாதன் ஆஜராகி, பிரேத பரிசோதனையில் உள்ள குளறுபடிகள் குறித்து சில தகவல்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நிறுத்தி வைக்கப்பட்ட 2 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. நேற்று நடந்த விசாரணையின் போது, லோகநாதன் நேரில் ஆஜராகி, “நிலுவையில் இருந்த 2 மாத சம்பளத்தை வழங்கிவிட்டனர். ஆனால் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி தடயவியல் துறை அலுவலர் ரமேசுக்கு இன்னும் ஊதியம் வழங்கவில்லை“ என்று தெரிவித்தார். அவருக்கு 48 மணி நேரத்திற்குள் ஊதியம் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது லோகநாதன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “அவ்வாறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், ஒருவரது உடலை பிரேத பரிசோதனையை முறையாக செய்து அறிக்கையை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும்? என்ற விவரங்களை விஞ்ஞான அலுவலர் லோகநாதன் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Tags :
Next Story