மாவட்ட செய்திகள்

ஆம்பூர் பஜார் பகுதியில்மு.க.ஸ்டாலின் நடந்து சென்று ஆதரவு திரட்டினார்அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார் + "||" + Ambur Bazar area MK Stalin walked on to support Ambedkar sculpted the evening

ஆம்பூர் பஜார் பகுதியில்மு.க.ஸ்டாலின் நடந்து சென்று ஆதரவு திரட்டினார்அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார்

ஆம்பூர் பஜார் பகுதியில்மு.க.ஸ்டாலின் நடந்து சென்று ஆதரவு திரட்டினார்அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார்
ஆம்பூர் பஜார் பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆம்பூர், 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வேலூர் மாவட்டத்தில் முதல்கட்ட பிரசாரத்தை முடித்த மு.க.ஸ்டாலின், நேற்று 2-வது கட்டமாக தனது பிரசாரத்தை ஆம்பூரில் தொடங்கினார்.

முன்னதாக அவர் நேற்று முன்தினம் இரவு ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவன விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதனையடுத்து நேற்று காலை 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கே.எம்.சாமி திடலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து ஆம்பூர் பஜார் பகுதிக்கு சென்ற அவர் பழக்கடை பஜார், காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நடந்து சென்று கடைக்காரர்கள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். மு.க.ஸ்டாலின் வருகை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. திடீரென பஜாரில் உள்ள கடைக்கு வந்து ஸ்டாலின் ஆதரவு திரட்டியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் ஸ்டாலினுக்கு கைகொடுத்து மகிழ்ந்தனர். பாங்கி மார்க்கெட்டில் அமைந்துள்ள பெரும்பாலான கடை வியாபாரிகளிடம் கைகொடுத்து ஆதரவு திரட்டினார்.

அப்போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அ.செ.வில்வநாதன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் மஸ்தான், ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், மாதனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் தான் மக்களுக்கு மகிழ்ச்சி - திண்டுக்கல் லியோனி பேச்சு
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்தால் தான் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று முதுகுளத்தூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசினார்.
2. திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி - மு.க.ஸ்டாலின்
டெல்லியில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
3. சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் கைது; நாட்டிற்கே அவமானம் - மு.க.ஸ்டாலின்
சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இந்திய நாட்டிற்கே அவமானமானது என மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் - மு.க.ஸ்டாலின்
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5. துண்டுச்சீட்டு பார்த்து பேசுவது ஏன் ? தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
பொதுக்கூட்டங்களில் பா.ஜ.க. நிர்வாகிகளை போல் பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேச கூடாது என்பதால் துண்டுச்சீட்டு வைத்து பேசுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.