மாவட்ட செய்திகள்

தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா முத்தரசன் குற்றச்சாட்டு + "||" + The Election Commission has acted as a moral right by the police with the help of the ADMK

தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா முத்தரசன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா முத்தரசன் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவாரூர் வருகை தந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது போல பிரசாரத்தை நாளை (அதாவது இன்று) திருவாரூரில் நிறைவு செய்கிறார். தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். சாதாரண வியாபாரிகளை மறித்து பணத்தை பறிக்கின்ற தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் பணப்பட்டுவாடாவை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,


எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க கூட்டணி செயல்படுகிறது. எனவே தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தல் 2 கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் அல்ல. நாட்டையும், அரசியல் சட்டத்தையும், மதசார்பின்மையையும் காப்பாற்றுவதற்கான தேர்தல்.

அன்புமணி ராமதாஸ் வாக்கு சாவடிகளில் வன்முறையை தூண்டி தங்களுக்கு சாதகமாக வாக்குகளை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிப்படையாகவே பேசுகிறார். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி வந்த ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு பெட்டி இறக்கப்பட்டு தனியார் காரில் ஏற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.


சிறுபான்மையின மக்கள் அச்சத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாடுகாப்பாற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். அ.தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்வேன் என்கிறது. ஆனால் பா.ஜனதா அதுகுறித்து எந்தவிதமான கருத்தும் கூறவில்லை.

சேலம் எட்டுவழிச்சாலைக்கு நீதி மன்றம் தடைவிதித்துள்ளது. மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழக முதல்–அமைச்சரின் ஆதரவோடு மீண்டும் எட்டுவழிச்சாலை அமைப்போம் என்று பேசுகிறார். மதவாத கும்பலுக்கு முடிவுகட்டுவோம். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றாட்சி காண்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சேதுராமன், மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பால் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி
பால் விலை உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
2. மத்திய அரசின் சட்டங்களால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிப்பு ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மூலமாக மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஜவாஹிருல்லா குற்றம் சாட்டி உள்ளார்.
3. இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வருவது மோடியின் கனவு தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வருவது மோடியின் கனவு என தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
4. நாகர்கோவில் அரசு விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு-பூச்சிகள் மாணவிகள் குற்றச்சாட்டு
நாகர்கோவில் அரசு விடுதியை சேர்ந்த மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.
5. தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை அமல்படுத்த திட்டம் முத்தரசன் பேட்டி
தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார்.