நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகையில், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நாகப்பட்டினம்,
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது பொதுமக்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்படுவோரை எச்சரிக்கும் வகையிலும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்செல்வன், நிலஅபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன், சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
250 பேர் பங்கேற்பு
நாகை ஊசி மாதா கோவிலில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு பழைய பஸ் நிலையம், சி.எஸ்.ஐ. பள்ளி, நாலுகால் மண்டபம், அரசு மருத்துவமனை வழியாக அவுரித்திடலில் முடிவடைந்தது. இதில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு திருவேங்கடம் மற்றும் மேற்கு வங்காளம் மாநில சிறப்பு ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story