காங்கேயம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
காங்கேயம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
காங்கேயம்,
திருப்பூர் நல்லூர் அருகேயுள்ள விஜயாபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 39). இவரது மனைவி கல்பனா, லட்சுமணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பனியன்களையும் எடுத்து விற்றுவந்தார். இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் அதிகமானது. கடன்காரர்கள் கடனை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த லட்சுமணன் நேற்றுமுன்தினம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கிராமம் ராசாப்பாளையத்தில் உள்ள தனது பாட்டி பொன்னம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
Related Tags :
Next Story