தப்பியோடிய போது பிடிக்க முயன்ற போலீஸ்காரரை லத்தியால் தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு


தப்பியோடிய போது பிடிக்க முயன்ற போலீஸ்காரரை லத்தியால் தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 April 2019 4:15 AM IST (Updated: 17 April 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

மான்கூர்டில் தப்பியோடிய போது பிடிக்க முயன்ற போலீஸ்காரரை லத்தியால் தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மான்கூர்டில் தப்பியோடிய போது பிடிக்க முயன்ற போலீஸ்காரரை லத்தியால் தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

லத்தியால் தாக்கிய வாலிபர்

மும்பை மான்கூர்டு சாதே நகர் பகுதியில் வாலிபர்கள் சிலர் சண்டை போட்டு கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 4 போலீசார் அங்கு விரைந்து சென்ற னர்.

இந்தநிலையில், போலீசாரை பார்த்ததும் சண்டைபோட்டு கொண்டு இருந்த வாலிபர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். இதில், போலீஸ்காரர் ஒருவர் பிரவின் சூரியவன்சி ஆகாஷ் (வயது20) என்ற வாலிபரை துரத்தி பிடித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போலீஸ்காரர் என்றும் பாராமல் அவரிடம் இருந்த லத்தியை பறித்தார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

கமிஷனர் எச்சரிக்கை

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக மும்பையில் போலீசார் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. போலீசார் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Next Story