மாவட்ட செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் - ரங்கசாமி பேச்சு + "||" + The success of NR congress is the only way to get the funds for Pondicherry - Rangaswamy's speech

என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் - ரங்கசாமி பேச்சு

என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் - ரங்கசாமி பேச்சு
புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் நிதி கிடைக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி நேற்று கதிர்காமம், இந்திராநகர் தொகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார்.


அப்போது ரங்கசாமி பேசியதாவது:-

பொது வினியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அனைவருக்கும் வழங்குவதுதான் ஒரு சிறந்த அரசு செயல்படுவதற்கு உதாரணம். ஆனால் புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமும் இல்லை.

தற்போது ரேஷன் கடைகளில் எந்தவித பொருட்களும் வழங்கப்படுவது இல்லை. இந்த செயல்பாடு ஒன்றே இந்த அரசு சரியாக செயல்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றாலும் தனியார் தொழிற்சாலைகளை கொண்டுவந்தாவது வேலைவாய்ப்பு தந்திருக்கலாம். ஆனால் அப்படியும் ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

இதனால் வேலையில்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் பாரதீய ஜனதா கூட்டணிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. பிரதமர் மோடியும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார்.

மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிறைய திட்டங்களும், நிதியும் கிடைக்கும். அந்தவகையில் இங்கு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால் மத்திய அரசில் பங்கு வகிக்க வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் புதுச்சேரிக்கு பல நன்மைகளும், புதிய திட்டங்களும் கிடைக்கும். இளைஞர்கள் வசம்தான் புதுச்சேரியின் எதிர்காலம் உள்ளது. அதனால்தான் இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இளைஞர்கள்தான் எதிர்காலத்தில் பெரிய தலைவர்களாக வருவார்கள்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு
வருகிற 20-ந் தேதி ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
3. காங்கிரஸ் புதிய தலைவர் யார்? டெல்லியில் கூடியது காரியக் கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடியது.
4. இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை, போக மாட்டேன் -வைகோ ஆவேசம்
இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை போக மாட்டேன் என வைகோ ஆவேசமாக கூறினார்.
5. காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, பா.ஜனதாவை தோற்கடிக்கலாம் - அஸ்லாம் சேர் கான்
காங்கிரஸ் 12 கோடி மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்லாம் சேர் கான் கூறியுள்ளார்.