ஆழ்கடல் அதிசயத்தை ரசிக்க உதவும் ‘ஸ்கூபா டைவிங்’
மூன்று விஷயங்கள் எப்போதும் அலுப்பு தட்டாதவை. சிறிய குழந்தை, யானை அடுத்து கடல். இம்மூன்றும் எப்போது பார்த்தாலும் அலுப்பு ஏற்படாது.
ஆழ்கடலுக்குச் சென்று அதிசயங்களை ரசிக்க உதவுவதுதான் ஸ்கூபா டைவிங். கடலுக்கு அடியில் சென்று நீருக்கடியில் நிலவும் அற்புத உலகத்தைப் பார்த்து ரசிக்கலாம். இத்தகைய ஸ்கூபா டைவிங் வசதி உலகம் முழுவதும் உள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆழ்கடல் அதிசயங்களைப் பார்த்து ரசிக்கும் வசதி உள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் ஹேவ்லாக் தீவுகள், நீல் தீவுகளில் இத்தகைய ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் அதிசயங்களைக் காண வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவாவில் கிராண்ட் தீவு, கர்நாடக மாநில நேத்ரானி தீவு, கேரளத்தில் கோவளம், லட்சத் தீவுகளில் பங்காராம், கட்மட் தீவு, புதுச்சேரி பவளப்பாறை தீவு. உள்ளிட்டவற்றில் இத்தகைய ஆழ்கடல் அதிசயங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் உள்ள அந்தமான் கடல் பகுதியில் அரிய வகை கடல் இனங்களைக் கண்டு ரசிக்கலாம். ஆழ்கடலுக்கு சென்று காட்சிகளை ரசிக்க உங்களுக்கு பிராண வாயு அடங்கிய சிலிண்டர் மற்றும் நீருக்கடியில் செல்ல உதவும் உடை உள்ளிட்டவை வழங்கப்படும். ஆனால் அதற்கு முன்பு நீங்கள் உரிய தகுதியுடன் இருக்கிறீர்கள் என்பதற்கு மருத்துவரின் சான்று பெற்றிருக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற அரிய வகை கடல் காட்சிகளை ரசிக்க ரூ.3,500 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
Related Tags :
Next Story