மாவட்ட செய்திகள்

காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை + "||" + Police seized 4,600 liters of liquor in the field near Karaikal

காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை

காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை
காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்கால்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தற்போது கள், மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி நடைபெறும் மது விற்பனையை தடுக்க போலீஸ் துறை மற்றும் கலால் துறை சார்பில் காரைக்காலில் தீவிர ரோந்து பணி நடைபெற்றது.


இந்நிலையில், திருநள்ளாறு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் வயல்வெளியில்

போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வயலில் கேன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 4,600 லிட்டர் சாராயம் கேட்பாரற்று கிடந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது. சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இந்த சாராயத்தை வயலில் போட்டு சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 6 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. ஆன்-லைனில் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை: ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் 9 பேர் கைது
ஆன்-லைனில் ரெயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. கணக்கில் வராத ரூ.2¾ லட்சம் பறிமுதல்: வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட 11 பேர் மீது வழக்கு
தஞ்சையில் கணக்கில் வராத ரூ.2¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. பணம் வைத்து சூதாட்டம்: தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 8 பேர் கைது - கார், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
பாகலூர் அருகே பணம் வைத்து சூதாடியதாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 12 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5. திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 3 பயணிகளிடம் விசாரணை.

அதிகம் வாசிக்கப்பட்டவை