திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடப்பதையொட்டி, நேற்று அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின் னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.
திருச்சி,
நாடாளுமன்ற தேர்தலுக் கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று (வியாழக் கிழமை) நடைபெற உள்ளது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வ கோட்டை(தனி), புதுக் கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் நாடாளு மன்ற தேர்தலுக்காக மொத்தம் 679 வாக்குச்சாவடி மையங் களில் 1,660 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 177 வாக்குச்சாவடி கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த வாக்குச்சாவடி களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளன. எந்த வாக்குச் சாவடியிலாவது பிரச்சினை என தெரிந்தால், அதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண் காணித்து நடவடிக்கை எடுக் கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய் யம் வேட்பாளர்கள் உள்பட 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 பேரின் பெயர் மட்டுமே இடம் பெற முடியும் என்பதால், 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படு கிறது. அதன்படி 1,660 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக 3,320 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,660 கட்டுப்பாட்டு எந்திரங் களும், யாருக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பதை உறுதி செய்யும் ‘விவிபேட்’ எந்திரங்கள் 1,600 ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பின்னர் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர் களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவையும், 2-வது வாக்குப்பதிவு எந்திரங்களில் 8 வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகிய வையும் பொருத்தப்பட்டன. இதில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என நினைக்கும் வாக்காளர்கள் நோட்டாவுக்கு அளிக்கும் வகையில் 25-வது இடத்தில் ‘நோட்டா’வுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு தாசில்தார் அலுவலகங்கள், திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகம், திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை, கந்தர்வ கோட்டை தாசில்தார் அலுவலகங்களில் இருந்து அனைத்து வாக்குச்சாவடி களுக்கும் தேவையான பொருட்கள் அடங்கிய பை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், ‘விவிபேட்’ எந்திரங் கள் லாரிகள் மூலம் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான எஸ்.சிவராசு பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் இருந்து அனைத்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் தனியாக வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட்டு சிறப்பு வசதி செய்யப்பட் டுள்ளன. சக்கர நாற்காலி, கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் அனைத்தும் செய் யப்பட்டுள் ளன. சக்கர நாற் காலிகளை இயக்க வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் தன்னார்வ தொண்டர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி மையங் களில் வாக்காளர் பூத் சிலிப் இது வரை பெறப்படாத நபர்கள் யாரேனும் இருந்தால் பி.எல்.ஓ. என்று சொல்லப் படும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் வாக்காளர் பூத் சிலிப்பை பெற்றுக்கொண்டு வாக்களிக்கலாம். அதே வேளையில் வாக்காளர் பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்து வாக்களிக்க முடியாது. அத்து டன் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 11 ஆவணங் களில் ஏதாவது ஒன்றை கொண்டு வந்து வாக்களிக்க லாம். இது தொடர்பாக விரிவாகவும், விளக்கமாகவும் செய்திதாள்களில் வெளி வந்துள்ளது. மேலும் அந்தந்த வாக்குச் சாவடிகளி லும் ஒட்டப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடி களுக்கு வந்து வாக்களிப்பது உரிமை, கடமை என்பதை மீண்டும் நினை வுறுத்தி வாக் களிக்குமாறு மாவட்ட நிர் வாகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story