நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வந்தோம் புதிதாக வாக்களிக்க வந்த பெண்கள் பேட்டி
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க வந்தோம் என்று புதிதாக வாக்களிக்க வந்த 3 பெண்கள் கூறினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சல்வேஷன் ஆர்மி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாத்தியார்விளையை சேர்ந்த நிவேதா (வயது 21), நிஷா (21), ரதிஷா (19) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் முதல் முறையாக வாக்களிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் 3 பேரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும், எங்களது உரிமையை நிலை நாட்டவும் இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க வந்துள்ளோம். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் விதமாக வாக்குகளை செலுத்த வந்தோம். படிக்கக்கூடிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்று படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி கடன்களை ரத்து செய்ய வேண்டும். தரமான கல்வி, ஒரே மாதிரியான கல்வி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். கல்வியை வியாபாரமாக்க கூடாது.
படிப்புக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை உடனே வழங்க வேண்டும் என்பதற்காகவும், அதற்காக ஒரு நல்ல அரசு மத்தியில் அமையவும் நாங்கள் வாக்களிக்க வந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவர்களில் நிவேதா எம்.எஸ்.சி. படித்து வருகிறார். நிஷா பி.எஸ்.சி பட்டதாரி, ரதிஷா பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

Related Tags :
Next Story