காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது


காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது
x
தினத்தந்தி 19 April 2019 4:00 AM IST (Updated: 19 April 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

காதலனை விரட்டியடித்து விட்டு இளம்பெண்ணை கற்பழித்த 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

மும்பை, 

காதலனை விரட்டியடித்து விட்டு இளம்பெண்ணை கற்பழித்த 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

இளம்பெண் கற்பழிப்பு

புனேயை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி பிம்பிள் சவுதாகர் பகுதிக்கு காதலனுடன் சென்றார். அங்கு தனிமையில் இளம்பெண் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ராணுவ வீரர்கள் சமுந்தர் சிங், ராஜ்னிஸ் குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் தனிமையில் இருந்த காதலர்களை சிறைப்பிடித்தனர். இதில் அவர்கள் இளம்பெண்ணின் காதலனை தாக்கி அங்கு இருந்து விரட்டி அடித்தனர். பின்னர் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப் பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணுவ வீரர்களை கைது செய்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு மீதான விசாரணை புனே செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மருத்துவ சோதனை முடிவுகள், சாட்சியங்கள் மூலம் ராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு 2013-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் சமுந்தர் சிங், ராஜ்னிஸ் குமார் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதை தள்ளுபடி செய்து செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

Next Story