சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரம் குறித்து கலெக்டரிடம் மனு


சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரம் குறித்து கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 23 April 2019 4:00 AM IST (Updated: 22 April 2019 8:11 PM IST)
t-max-icont-min-icon

சமூகவலைதளத்தில் சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

சிவகங்கை,

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னதம்பி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் அந்த சமூகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் ஆகியோர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:–

கடந்த சிலநாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் 2 பேர் அவதூறாக பேசியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

எனவே சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது; சமூகவலைதளத்தில் அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர்களை இன்னம் 3 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இல்லையெனில் அடுத்த கட்டமாக கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும் இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் செய்தவர்கள் மீது பொன்னமராவதி உள்பட பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story