அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்
அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்,
இந்திய படைத்துறையினரால் போர்்் காலத்தில் அல்லது அமைதி காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீர தீரச் செயல்களுக்காகவும், தன்னலமற்ற உயிர் தியாகத்திற்காகவும் அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது.
படைத்துறையினர், குடிமக்கள், இயற்கை இடர்பாடுகளின்பொழுது துணிகர செயல்களி்ல் ஈடுபட்டவர்கள், நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றியவர்கள், தீ விபத்தின் போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மனித உயிரை காப்பாற்றியவர்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து மீட்பவர்கள், திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர்களிடமிருந்து துணிகர நடவடிக்கை மேற்கொண்டு காப்பாற்றியவர்கள் மற்றும் வீர தீர செயல்புரிந்தவர்கள், இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர். விளையாட்டரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் என்ற முகவரிக்கு நாளைக்குள்(புதன் கிழமை) சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேற்கொண்டு விவரங்கள் பெற திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story