திருச்சி கல்லூரியில் மாணவ-மாணவிகள் குவிந்தனர் ஒரேநாளில் 1,237 விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் சேருவதற்காக மாணவ-மாணவிகள் குவிந்தனர். ஒரேநாளில் 1,237 விண்ணப்ப படிவங்களை அவர்கள் வாங்கி சென்றனர்.
திருச்சி,
திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் பெரியார் ஈ.வெ.ரா. கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த கல்லூரி தந்தை பெரியாரால் நிலம் வழங்கப்பட்டு தமிழக அரசால் தொடங்கி நடத்தப்பட்டு வருவதாகும். இக்கல்லூரியில் படித்த மாணவர்களில் பலர் அரசியல் தலைவர்களாகவும், அரசு உயர் பதவிகளிலும், சிறந்த கல்வியாளர்களாகவும் உள்ளனர்.
இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் இம்மாதம் 22-ந்தேதி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையொட்டி நேற்று காலையில் இருந்தே கல்லூரி வளாகத்தில் விண்ணப்ப படிவங்களை வாங்கி செல்வதற்காக ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து குவிந்தனர். இதனால், கல்லூரி வளாகத்தில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கரூர், சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், நாகை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் வந்து இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
மே 3-ந் தேதி கடைசி நாள்
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளை பொறுத்தவரை பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி கணிதம், பி.காம். வணிகவியல், பி.ஏ.ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.எஸ்சி காட்சி தொடர்பியல் உள்ளிட்ட 16 துறைகள் உள்ளன. இதில் அறிவியல், வணிகவியல் பாட பிரிவுகளில் சேருவதில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,237 விண்ணப்பங்கள் விற்பனை ஆகி இருந்தன.
விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் ஜூலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கல்லூரி கல்வி இயக்குனரின் அறிவுரைப்படி, விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்கி உள்ளது. மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் மே 3-ந்தேதி ஆகும். எஸ்.சி, எஸ்.டி. மாணவ மாணவிகள் தங்களது அசல் சாதி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை காட்டி விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்று செல்லலாம். மற்ற பிரிவினருக்கு ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை 50 ரூபாய் ஆகும்.
கலந்தாய்வு
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பி.காம். பாட பிரிவுகளுக்கு மே 6-ந்தேதியும், பி.எஸ்சி. அறிவியல் பாட பிரிவுகளுக்கு மே 7-ந்தேதியும், பி.ஏ. மற்றும் காட்சி தொடர்பியல் பிரிவுகளுக்கு மே 9-ந் தேதியும் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள், பெற்றோருடன் கலந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story