திருச்சிற்றம்பலம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் அதிகாரிகள் கவனிப்பார்களா?


திருச்சிற்றம்பலம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் அதிகாரிகள் கவனிப்பார்களா?
x
தினத்தந்தி 26 April 2019 4:00 AM IST (Updated: 26 April 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் அருகே குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருச்சிற்றம்பலம்,

காவிரி, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருவையாறு பகுதியில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலமாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயத்தில் இருந்து பிரித்து விடப்படும் குடிநீர் திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி வழியாக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ஆவணம் கைகாட்டி வரை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செருவா விடுதி சங்கிலி குளக்கரையின் வழியாக செல்லும் குழாயில் நேற்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வெளியேறி சங்கிலி குளத்தில் கலந்து வீணாகி வருகிறது.

சீரமைக்க வேண்டும்

கடந்த ஆண்டும் இதே பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இந்த ஆண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் குடிநீர் வீணாவது அப்பகுதி பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.

இதை அதிகாரிகள் கவனித்து குடிநீர் வீணாவதை தடுத்து, குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்றும், குடிநீர் குழாய்களை அவ்வப்போது ஆய்வு செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story