கடலோர பகுதிகளில் மழை காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க அரசு கட்டிடங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்
கடலோர பகுதிகளில் மழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் அரசு கட்டிடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
புயல் மற்றும் மழை காலங்களில் துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று (நேற்று வியாழக்கிழமை) முதல் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தொடர்ச்சியாக புயல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. அந்த வகையில் கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி புயல் குறித்த அறிவிப்பினை பொதுமக்களுக்கு முன்னதாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடலோர பகுதிகளில் மழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் அரசு கட்டிடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் கடலோர காவல் படை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் போதுமான உயிர் காக்கும் சாதனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மீன்வளத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தினால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கையினை மீனவர்களிடம் தெரிவித்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புயல் மழைக்காலங்களில் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தாசில்தார்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள் தங்களது பகுதிகளில் ஏற்பட்ட சேதம் குறித்த விபரத்தினை உடனுக்குடன் தொலைபேசியில் வாயிலாக தகவல் தெரிவிப்பதுடன் de-o-c-p-dkt@ gm-a-il.com என்ற இணைதளம் முகவரிக்கு தினசரி அறிக்கையாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் TN-S-M-A-RT என்ற செயலியை தங்களது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து வானிலை ஆராய்ச்சி மையம் சென்னை மண்டல அலுவலகத்தில் இருந்தும், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் வரப்பெறும் புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், பொது மக்களும் மேற்கண்ட செயலியை தங்களது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story