மாவட்ட செய்திகள்

வளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் + "||" + The people who besieged the Panchayat office with the vaccination requested drinking water near the residence

வளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள அயன்பொருவாய் ஊராட்சிக்குட்பட்ட அயன்பொருவாய், சொக்கம்பட்டி, கிழக்கு காடு, வடக்குகளம், பாறைக்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.


மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டதால் ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி நிர்வாகத்திடமும் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காவிரி குடிநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அயன்பொருவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். அங்கு அவர்கள் குடிநீர் கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு காவிரி குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக காவிரி குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருத்துறைப்பூண்டியில், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டியில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. குஜிலியம்பாறை அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
குஜிலியம்பாறை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
4. குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய குடிநீர் கடை, வீடுகளுக்குள் புகுந்தது
மணப்பாறை அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு மேல் குடிநீர் பீறிட்டு வெளியேறி, கடை மற்றும் வீடுகளுக்குள் புகுந்தது.
5. குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - புவனகிரியில் பரபரப்பு
புவனகிரியில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.