ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; ரியல் எஸ்டேட் அதிபர் கைது


ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 28 April 2019 5:15 AM IST (Updated: 28 April 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

நான் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2015–ம் ஆண்டு பி.எஸ்.சி. தொழில் நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். அப்போது எனக்கு 17 வயது ஆகும்.

கல்லூரி அருகே உள்ள கடைக்கு சென்று வந்த போது ஈரோடு, வில்லரசம்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் (வயது 37) எனக்கு பழக்கமானார். அவர் திருமணம் ஆனவர். பிறந்த நாளையொட்டி விருந்து கொடுப்பதாக கூறி என்னை அவர் ஏற்காட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் என்னிடம் ஆபாச படங்களை காட்டினார். பின்னர் திடீரென அவர் எனக்கு முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தார்

மேலும் அதனை அவரது செல்போனில் படம் பிடித்துக்கொண்டார். பின்னர் அதை என்னிடம் காட்டி, தன்னுடன் உல்லாசமாக இருக்க இணங்காவிட்டால் அதை என்னுடைய வீட்டில் காட்டி விடுவேன் என்றும், இணையதளத்தில் போட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் நான் பயந்துபோனேன்.

பின்னர் அவர் என்னை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அதனையும் அவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் நான் 2 முறை கர்ப்பமானேன். முதல் முறை கர்ப்பமானபோது சமாதானப்படுத்தி எனக்கு அவர் தாலி கட்டினார். பின்னர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கணவர் என்று கூறி கருக்கலைப்பு செய்தார். 2–ம் முறை மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்தார்.

இதுபற்றி கேட்ட போது என்னுடைய ஆபாச படத்தை இணையதளத்தில் போட்டு விடுவதாக மீண்டும் மிரட்டினார். இதனால் நான் இதுபற்றி யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் தற்போது அவருக்கு தெரிந்த நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் ராதாகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் கற்பழிப்பு, கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச படம் எடுத்து மிரட்டுவது, கட்டாய கருக்கலைப்பு செய்தல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அதன் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story