நாகர்கோவில் அருகே கர்ப்பிணி திடீர் சாவு போலீசார் விசாரணை
நாகர்கோவில் அருகே கர்ப்பிணி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே பத்மநாபபுரம் பட்டாணிபுரம் தெருவை சேர்ந்தவர் கோபகுமார்(வயது 40). இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகள் அனிதா குமாரி (33) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 6 மாதத்துக்கு முன் கோபகுமார் விடுமுறையில் ஊருக்கு வந்தார். பின்னர்அவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வெளிநாடு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த அனிதா குமாரிக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை கோபகுமாரின் பெற்றோர் திருவிதாங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேறு மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் படி கூறினார்கள். உடனே அவர்கள் அனிதா குமாரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அனிதாகுமாரியின் பெற்றோர் வந்து, அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வளர்ச்சி குறைவாக உள்ளது என கூறியதாக தெரிகிறது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதா குமாரி மயங்கி விழுந்தார்.
உடனே, அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அனிதா குமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைகேட்டு பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுபற்றி சந்திரசேகரன் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிதா குமாரி திடீர் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story