வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அங்குள்ள 2 பிரமாண்ட திரைகளில் வீடியோ காட்சிகளை ஊழியர்கள் பார்வையிட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் கேமராவில் பதிவாகும் காட்சிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியான நான் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோர் தினமும் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு வருகிறோம். வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் 24 மணி நேரமும் அங்கு இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் யார் சென்றாலும் அங்குள்ள பதிவேடுகளில் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 வாக்குச்சாவடிகள் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதிக்குள் வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story