தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட தி.மு.க.வினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு


தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட தி.மு.க.வினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 April 2019 10:45 PM GMT (Updated: 2019-04-30T21:01:51+05:30)

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி தி.மு.க. மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தக்கலை,


பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி தி.மு.க. மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொள்ள ஏராளமான தி.மு.க.வினர் தாலுகா அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது போலீசார் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

தொடர்ந்து, தி.மு.க. மகளிர் அணியினர் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளித்தனர். நிகழ்ச்சியில், மகளிரணிசெயலாளர் கிளாடிஸ்லில்லி தலைமையில் முன்ளாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ, துணை செயலாளர் ஜாண்கிறிஸ்டோபர், நகர செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story