வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல உள்ள புதுக்கோட்டை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி


வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல உள்ள புதுக்கோட்டை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 30 April 2019 7:08 PM GMT)

வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல உள்ள புதுக்கோட்டை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல உள்ள புதுக்கோட்டை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல உள்ள உதவி தேர்தல் அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் அதிகாரிகள் தண்டாயுதபாணி, சசிகலா, கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையானது கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி, விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி, திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக கட்டிடத்திலும் எண்ணப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், 6 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் வாக்கு எண்ணும் நாளன்று உரிய அடையாள அட்டையுடன் செல்வது முதற்கொண்டு தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் தவறாது பின்பற்றுவது குறித்து இந்த பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story