மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கனிமொழி, ஜூன் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் - விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு + "||" + Speaking of the chief minister scandal: Kanimozhi to be present on June 4 - Villupuram court order

முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கனிமொழி, ஜூன் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் - விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கனிமொழி, ஜூன் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் - விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு
முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கனிமொழியை, ஜூன் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி கலந்துகொண்டார். அப்போது அவர் தமிழக அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பற்றி அவதூறாக பேசியதாக கூறி மாவட்ட அரசு வக்கீல் சீனிவாசன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.தொடர்புடைய செய்திகள்

1. ‘மக்களுக்காக என்ன செய்தார்கள்?’ ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா? முதல்-அமைச்சர் கேள்வி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மக்களுக்காக என்ன செய்தார்கள்? என்றும், அவர்களுக்கு அரசியல் தெரியுமா? என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
2. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க. மக்கள் இயக்கம் என நிரூபிக்கப்பட்டு உள்ளது முதல்-அமைச்சர் பேச்சு
இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றியின் மூலம் அ.தி.மு.க. மக்கள் இயக்கம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கே.வி.தங்கபாலு சந்திப்பு
சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு சந்தித்து பேசினார்.
5. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் முதல்-அமைச்சர் பேச்சு
‘அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.