மும்பை மாநகராட்சி கமிஷனருடன் முதல்-மந்திரி மனைவி அம்ருதா சந்திப்பு


மும்பை மாநகராட்சி கமிஷனருடன் முதல்-மந்திரி மனைவி அம்ருதா சந்திப்பு
x
தினத்தந்தி 1 May 2019 5:07 AM IST (Updated: 1 May 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் நேற்று மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அம்ருதா பட்னாவிஸ் கூறியதாவது:-

மும்பை,

மும்பை மாநகராட்சி பள்ளிகளுக்கு பெண்கள் அமைப்பினர் மதிய உணவு திட்டத்துக்காக உணவை வினியோகித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக என்னிடம் கூறினர். 

எனவே அந்த பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து பேசினேன். பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அஜாய் மேத்தா தெரிவித்து உள்ளார். அங்கன்வாடி ஊழியர்கள் பிரச்சினை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story